Mobile

5 ஜி ஆதரவுடன் சீனாவில் அறிமுகமானது Honor 30 லைட் ஸ்மார்ட்போன்!

ஹானர் நிறுவனம் சீனாவில் ஹானர் 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹானர் 30 லைட் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Honor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன், 6.5′ இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்ட்தாக உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் MT6873 சிப்செட் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 256 ஜிபி வரை மெமரி கார்டு அம்சத்தினைக் கொண்டுள்ளது.

5 ஜி ஆதரவுடன் சீனாவில் அறிமுகமானது Honor 30 லைட் ஸ்மார்ட்போன்!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை ஹானர் 30 லைட் 5 ஜி 48 மெகாபிக்சல் கொண்ட ஒரு பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட 120° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா போன்றவற்றினையும் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டு உள்ளது.

இந்த போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இது மேஜிக் யுஐ 3.1.1 உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 5G (SA / NSA) / இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS / GLONASS / Beidou, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் இன்று வெளியானது இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil