Vivo Z1x இந்தியாவில் நேற்று செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. Vivo Z1x இன் முக்கிய சிறப்பம்சங்கள் யாதெனில், இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 9.1-ஐ மையப்படுத்தி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. கூடுதலாக சூப்பர் AMOLED திரையினைக் கொண்டுள்ளது.
Vivo Z1x ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

Vivo Z1x ஸ்மார்ட்போன், 3
பின்புற
கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8
மெகாபிக்சல்
120 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த்
சென்சார் கேமரா. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி
கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-C போர்ட், GPS, மற்றும் 4G LTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. மற்றும் வாட்டர்-ட்ராப் நாட்ச் ஆகியவையும் கொண்டதாக உள்ளது