விவோ நிறுவனம் தற்போது விவோ வி 15 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பினை அறிவித்துள்ளது, தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
- விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி வகையின் விலை – ரூ. 19,990 (பழைய விலை ரூ. 26,990)
இந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது, மேல்ம் இது ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டுள்ளது. மேலும் இது டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளத்.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.