ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப் செயலி, நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்டுக்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஆடியோ மெசேஜை, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாமலே கேட்கும் அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கொண்டு வரப்படும். வழக்கமாக மெசேஜ் நோட்டிபிக்கேஷன் எவ்வாறு வருகிறதோ, எவ்வாறு படிக்கிறமோ, அதே போல தான் இனி ஆடியோ மெசேஜ் வரும்.

ஆடியோ மெசேஜ் நோட்டிபிக்கேஷனை க்ளிக் செய்தால் போதும். வாட்ஸ்அப் ஓபன் ஆகாமலே, அந்த ஆடியோவை கேட்கலாம். இந்த வசதி வேண்டாம் என்று நினைப்பவர்கள், வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை WABetaInfo என்ற வாட்ஸ்அப் அப்டேட்டை கண்காணித்து வரும் இணையதளம் தெரிவித்துள்ளது.
இது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன், மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.