Apps

ஊரடங்கினால் போர் அடிக்குதா? இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள பொழுதுபோக்கு அம்சம்!!

கொரோனா பரவுதல் தீவிரமானதன் காரணமாக, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே தங்கி வெளியே செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். டிவி என்ற பொழுதுபோக்கு அம்சத்தினைத் தாண்டி, வழக்கம்போல், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் என்றே இருந்து வருகின்றனர்.

வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பொழுதுபோக்க இன்ஸ்டாகிராம் ஒரு சிறப்பான அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊரடங்கினால் போர் அடிக்குதா? இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள பொழுதுபோக்கு அம்சம்!!

Co-Watching என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையானது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ வீடியோ அரட்டை வழியாக பயனர்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளது.

இந்த புதிய வசதியின்மூலம் இன்ஸ்டாகிராம் மூலம் தேடவும், குழுவுடன் உள்ளடக்கத்தைப் பகிரவும் செய்யமுடியும்.

அதாவது நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் இடுகைகளை வீடியோ அரட்டையில் காண முடியும் என்ற இந்த அம்சம் தக்க சமயத்தில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் வீடியோ அரட்டை செய்வது மட்டுமின்றி, விரும்பிய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட புகைப்படங்கள் / வீடியோக்களை நண்பர்களுடன் இணைந்து காண முடியும். இதன்மூலம் நண்பர்களுடன் இதுகுறித்த விவாதத்தில்/ உரையாடலில் ஈடுபடலாம்.

Related posts

அறிமுகமாகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.498/- மதிப்பிலான ஸ்டார் மெம்பர்ஷிப்!

TechNews Tamil

கொஞ்சம் மாத்தி யோசிச்சா போதும்… 100 ரூபாய்க்குள் எந்த பொருளையும் வாங்கலாம், Dream11 பாணியில் பொருட்களை விற்பனை செய்யும் புதிய ஆப்

TechNews Tamil

இயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்!!

TechNews Tamil