Mobile

இணையத்தில் கசிந்துள்ள ஒன்பிளஸ் 9 5ஜி விவரங்கள் இதோ!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பிளாட் ஆன டிஸ்ப்ளே கொண்டதாகவும் மேலும் பன்ச் ஹோல் கட்-அவுட் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் பயனர்களைக் கவரும் வகையில் மூன்று கேமரா சென்சார்கள், பிளாஷ் யூனிட் கேமரா மாட்யூல் கொண்டதாகவும் இருக்கின்றது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும் 1080×2400 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இணையத்தில் கசிந்துள்ள ஒன்பிளஸ் 9 5ஜி விவரங்கள் இதோ!!

இந்த ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது  120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஸ்ரீஷ் ரேட் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிகின்றது. மேலும் இது ஹெச்டிஆர் வசதியினைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் இயங்கும் தன்மை கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.

Related posts

இந்தியாவில் அசரவைக்கும் அம்சங்களுடன் ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

OnePlus 7T இன் அதிரடியான சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil