Mobile

ஹூவாய் Y9 ப்ரைம் உடன் ஹெட்போன், பவர் பேங்க் இலவசம்!

பாப்-அப் செல்பீ கேமராவை கொண்ட முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் ஆன இது, கடந்த வாரம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு, அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்தியாவில் Huawei Y9 Prime ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.15,990/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 முதல் Croma, Poorvika மற்றும் பிற அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு சலுகைகளின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போனுடன், ரூ.4598/- மதிப்புள்ள Huawei Sport BT headphones மற்றும் 15600 mAh பவர் பேங்க் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். 

ஹூவாய் Y9 ப்ரைம் உடன் ஹெட்போன், பவர் பேங்க் இலவசம்!

வழக்கமான விற்பனையின் போது, வாடிக்கையாளர்களுக்கு 6 மாத கால நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் Amazon Pay வழியிலான பரிவர்த்தனைக்கு ரூ.500/- உடனடி கேஷ்பேக் போன்ற சலுகைகள் கிடைக்கும்.

உங்கள் பழைய தொலைபேசிக்கு ஈடாக ரூ.1,500/- வரையிலான கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். எஸ்பிஐ வங்கி அட்டையை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

டிஸ்பிளே: 6.59 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளே 
பிக்சல்கள் தீர்மானம்: 1080×2340 
ரேம்: 4 ஜிபி 
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான EMUI 9.1 
பேட்டரி: 4,000 எம்ஏஎச் 
பின்பக்க கேமரா: 16MP + 8MP + 2MP 
முன்பக்க கேமரா: 16MP 



Related posts

ஐரோப்பாவில் களம் இறங்கியது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

OnePlus 7T இன் அதிரடியான அம்சங்கள்!

TechNews Tamil