Information Technology

வீட்டு வாசலிலும் வந்து நிற்கப்போகும் ஹெச்டிஎப்சி வங்கி ATM!!

கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 16,19,502 பேர் இதுவரை உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 97,250 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவில் 6761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை தீவிரமானதன் காரணமாக, இந்திய அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது.

மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பலவிதமான சேவைகளையும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் செய்து வருகின்றன.

வீட்டு வாசலிலும் வந்து நிற்கப்போகும் ஹெச்டிஎப்சி வங்கி ATM!!

அந்தவகையில் வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. மேலும் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பையும் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நீக்கியது.

சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிக்க வேண்டும் என்பதற்கான அவசியமில்லை என்றும் கூறப்பட்டது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில், பொதுமக்கள் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் வந்து நிற்கும் ATM வேனில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

இந்த சேவையானது விரைவில் அறிமுகமாக உள்ளதாகவும் ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

இந்த மொபைல் ATM சேவையானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 3-5 இடங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த சேவை இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Related posts

குழந்தைகளுக்கு ஏற்ற இறக்கைகளே இல்லாத மின்விசிறி!

TechNews Tamil

ரெட்மி நோட் 8 இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

ஜியோவுக்கு போட்டியாக BSNL வழங்கிய கூடுதல் டேட்டாக்கள்!

TechNews Tamil