சமூக வலைதளங்களில் அதிக பயனர்களைக் கொண்ட தளம், பேஸ்புக் ஆகும். உலகளவில் 2 பில்லியன் பேஸ்புக் பயனர்கள் உள்ளனர், இது பல சர்ச்சைகளை அவ்வப்போது கிளம்பிய வண்ணமே உள்ளது. இழுத்து மூடப்படும் அளவு பேசப்படும் செய்திகள், அதிக பயனர்களைக் கொண்டுள்ளதால், முதல் இடத்திலேயே நீடித்துவருகிறது.
பேஸ்புக்கின் இலவச சேவையாக இருப்பது இதன் அதிக அளவிலான அதீத பிரியம் கொண்டளுக்கு கட்டண சேவையாக மாற்றப்படவுள்ளது.

இதுகுறித்து பல தகவல்கள் வெளியானாலும் தற்போது ஆதாரமாக, பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது signup option க்கு கீழ் இது இலவசம் மற்றும் எப்போதும் விருப்பமானது என்ற டேக்லைன் இருக்கும்.
தற்போது இது விரைவானது மற்றும் எளிதானது என்று மாற்றப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது, இதன்மூலம் பேஸ்புக் பயனர்களிடமிருந்து கட்டணத்தினை வசூலிக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
மறுபுறம், நிறுவனத்தின் உரிமையாளர் பயனர்களுக்கு கட்டண சந்தாக்களை வழங்கும் பேஸ்புக் வணிக மாதிரியில் தேவையான மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும் இதுகுறித்த குழப்பங்கள் பயனர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.