ஜூம் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை ஹேக்கிங்க் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஜூம்செயலிக்கு மாற்று போல் பேஸ்புக் நிறுவனம் ஹேங்அவுட்ஸ் மீட் என்ற செயலியை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சேவையின் ப்ரீமியம் வெர்ஷனும் ஜூலை 1 வரை கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
அதாவது சேட்டிங்க் செயலியான மெஞ்சரை மேம்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஜூம் செயலிபோலவே பயன்படுத்திக் கொள்ளும்படி வெளியிட்டுள்ளது.
அதாவது தற்போதைய மெசெஞ்சரை அப்டேட் செய்த பின்னர் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதியினைப் பயனர்கள் பெற முடியும். இது தற்போது குறிப்பிட்ட பேஸ்புக் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் இவ்வசதி கிடைக்கப் பெறவில்லை. ஆனால் விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த சேவை கிடைக்கப் பெறும்.
இந்தப் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் 50 பேர் வரை ஒரு சாட்டிங் ரூமில் இணைத்துக்கொள்ள முடியும், மிகவும் முக்கியமாக பயனர்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதியைப் பயன்படுத்தும்போது அவை கண்காணிக்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.