Apps

ஜூம் செயலியின் மூலம் பயனர்களின் தகவல்களை திருடி இணையத்தில் விற்கும் ஹேக்கர்கள்!!

கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம்  செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டுள்ளது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசுகின்றனர்.

இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஜூம் செயலியையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது. பள்ளி சிறுமிகளுடன் புவியியல் பாடத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் போது திரைகளில் ஆபாச படங்கள் தோன்றியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜூம் செயலியின் மூலம் பயனர்களின் தகவல்களை திருடி இணையத்தில் விற்கும் ஹேக்கர்கள்!!

தற்போது, ஜூம் பயன்பாட்டால் மற்றுமொரு பிரச்சினை கிளம்பியுள்ளது, அதாவது சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஜூம் செயலியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது ஜூம் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை ஹேக்கிங்க் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

ஹேக்கர்கள் இந்தத் தகவல்களை தற்போது இணையத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இணையத்தின் டார்க் வெப் பகுதியில் இந்தத் தகவல்கள் வெளிப்படையாக விற்பனைக்கு வந்துள்ளது குறித்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் வெளியானதும் பயனர்கள் பலரும், கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் பயனர்கள் இதுகுறித்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து வருகின்றனர். இது முழுவதுமாக தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Related posts

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil

வாட்ஸ் அப்பில் மற்றவர்கள் மெசெஜ் பார்க்காமலிருக்க இதை செய்ங்க…!!

TechNews Tamil

வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கருத்துக் கணிப்பு நடத்திய இந்திய நிறுவனம்!!

TechNews Tamil