Apps

250 பேருடன் க்ரூப் கால் பேசலாம்.. மைக்ரோசாப்ட் அறிவிப்பு!!

மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் வீடியோ கால் சேவையானது அதிக பயன்பாட்டினைக் கொண்டு உள்ளது, வீடியோ செயலி மூலமே பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.

ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவியதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது.

இந்தநிலையில் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் கால் பதிக்க ஜியோ முடிவு செய்து அதுகுறித்த அறிவிப்பினையும் வெளியிட்டது.

250 பேருடன் க்ரூப் கால் பேசலாம்.. மைக்ரோசாப்ட் அறிவிப்பு!!

மெசஞ்சர் ரூம்ஸ் 50 பேரை அனுமதித்த நிலையிலும், JioMeet செயலியானது 100 பேரை ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையின் க்ரூப் கால் மூலம் 250 வரை பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பினை மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா வெளியிட்டுள்ளார். கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே டீம்ஸ் சேவையின் இந்த க்ரூப் கால் வசதி கிடைக்கப் பெறும். இலவசமாக பயன்படுத்துவோர் அதிகபட்சமாக 20 பேருடன் க்ரூப் கால் பேசலாம்.

சரியான நேரத்தில் மைக்ரோசாப்ட் வழங்கவுள்ள இந்த சேவை மிகச் சிறந்த அளவில் பிரபலமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related posts

ஜியோவில் ஈஸியா ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி.!

TechNews Tamil

நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்க pm svanidhi ஆப்!

TechNews Tamil

இனி வீடியோ காலிங்கில் 8 பேர் வரை பங்கேற்கலாம்… வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம்!!

TechNews Tamil