உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 35,26,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,48,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.
உலகினை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கால் பதித்து தலை விரித்தாடுகிறது. இதுவரை இந்தியாவில் 33,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாத துவக்கத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியினை அறிமுகம் செய்தது. அதாவது இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஜிபிஎஸ் மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்வதன் மூலம், நாம் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது இந்த செயலியில் பதிவாகி இருக்கும்.தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்த செயலியினை சிறப்பாகப் பயன்படுத்தியதோடு, அதன் அடிப்படையில் வெற்றியும் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த செயலியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, கொரோனா அறிகுறிகள், கொரோனா பாதித்தோர் நிலவரம் என கொரோனா குறித்த பலவிதமான விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த செயலியினை 6 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு இந்த செயலியினை ஊரடங்கு தளர்த்தபட்ட பின்னர் தற்போது, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவதை அரசு இப்போது கட்டாயமாக்கியுள்ளது.
சிவப்பு மண்டலத்தின் தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்படும், ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலங்களில் 100 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் திறக்கப்படும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்துவதை அனைத்து அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.