உலகினை உலுக்கி வரும் விஷயங்களில் ஒன்றாக தற்போது இருப்பது கொரோனா வைரஸ் ஆகும். இந்த வைரஸ் தற்போது சீனாவில் உள்ள வவ்வாலை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக ஆய்வு அறிக்கை முடிவுகள் வெளியாகின.
சீன மக்கள் அதிக அளவில் இந்த தாக்குதலுக்கு உள்ளாக காரணம், அவர்கள் பாம்புகளை உணவாக உண்ணுவதுதான். சீனாவில் உற்பத்தியான இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
சீனா சென்று திரும்பிவரும் மக்களை மிகவும் தீவிரமாக பரிசோதித்த பின்னரே இந்தியாவுக்குள் அனுமதித்தனர். அந்த நிலையிலும், இந்தியாவிலும் இந்த பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸ் பரவியது அதிர்ச்சிகரமான விஷயமாகும்.
தற்போது சீனாவில் 700 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் உள்ள ஹாங்காங்க் மற்றும் தைவானில் உள்ள கூகுள் கிளை அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.