Mobile

ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5.81 இன்ச் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது அட்ரினோ 618 GPU வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதியினையும் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது. கேமரா அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இது கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்களைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினையும் 3080 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

Deep Sea Blue வண்ணத்தில் Redmi Note 8 Pro!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் ஏ4!!

TechNews Tamil