கூகிள் நிறுவனம் தற்போது பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 5.81′ இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எச்டிஆர் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12MP பின்புற கேமரா, முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 மிமீ ஆடியோ ஜாக், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3140 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.