கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த எதிர்பார்ப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது அடுத்தமாத இறுதிக்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் முழு எச்டி உடனான ஸ்கிரீனைக் கொண்டிருக்கும். மேலும் இந்த Google Pixel 4a ஸ்மார்ட்போன், 1,080×2,340 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்டிருக்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5.8 இன்ச் டிஸ்பிளேவினை கொண்டு இருக்கும் என்று தெரிகிறது. பிக்சல் 4ஏ அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த போன் 64 ஜிபி + 6 ஜிபி மற்றும் 128 ஜிபி + 6 ஜிபி கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கும்.
கேமஐராவினைப் பொறுத்தவ, பின்புறத்தில் உள்ள கேமராவில் Google பிக்சல் 4 போன்ற வீடியோ பதிவு திறன் கொண்ட 12.2 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். புதிய கசிவு, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் மற்றும் 3.5 மிமீ headphone jack இருக்கும் என்று தெரிவிக்கிறது.
மேலும் கூகுள் பிக்சல் 4a 3,080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் இருக்கும்.