Mobile

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சத்தினைப் பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 618 GPU மற்றும் டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி கொண்டுள்ளதாக உள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மேலும் இது பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3140 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்த கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

399 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.!

TechNews Tamil

ஜியோ போனுக்கான சலுகை நவம்பர் வரை நீட்டிப்பு!!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது விவோ வை30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil