Apps

ப்ளே ஸ்டோரில் 10 கோடி டவுண்லோடுகளை கடந்துள்ள கூகுள் மீட்!!

கூகுள் நிறுவனம்  கூகுள் கணக்கு உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் Google Meet இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற செயலியை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

அதாவது கூகுள் மீட் செயலியினை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஜூம் செயலிபோலவே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ப்ளே ஸ்டோரில் 10 கோடி டவுண்லோடுகளை கடந்துள்ள கூகுள் மீட்!!

அதாவது இந்த செயலியில் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதியினைப் பயனர்கள் பெற முடியும். இந்தியாவினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் இவ்வசதி கிடைக்கப் பெறவில்லை. ஆனால் விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த சேவை கிடைக்கப் பெறும்.

Google Meet அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தினசரிக்கு 3 மில்லியன் பயனர்கள் இதனைப் புதியதாக பயன்படுத்திவருவதாகக் கூறப்பட்டு வந்தது. மேலும் கூகுள் மீட், ப்ளே ஸ்டோரில் 10 கோடி டவுண்லோடுகளை கடந்துள்ளது. மேலும் கடந்த  50 நாட்களில்  மட்டும் 2 மடங்காக டவுன்லோடு அதிகரித்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

மே மாதம் முதல் அனைத்துப் பயனர்களுக்கு Google Meet பயன்பாட்டுக்கு வரும்.

Related posts

டப்ஸ்மாஷ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி தன்னுடைய நிறுவனத்துடன் இணைத்த ரெடிட்!!

TechNews Tamil

பப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்!!

TechNews Tamil

அமேசானின் உள்ளூர் கடை திட்டம்.. சபாஷ் சரியான நேரம் இதுதான்!

TechNews Tamil