கூகுள் நிறுவனம் கூகுள் கணக்கு உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் Google Meet இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற செயலியை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
அதாவது கூகுள் மீட் செயலியினை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஆன்லைன் பாடம் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு ஜூம் செயலிபோலவே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதாவது இந்த செயலியில் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதியினைப் பயனர்கள் பெற முடியும். இந்தியாவினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் இவ்வசதி கிடைக்கப் பெறவில்லை. ஆனால் விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த சேவை கிடைக்கப் பெறும்.

Google Meet அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தினசரிக்கு 3 மில்லியன் பயனர்கள் இதனைப் புதியதாக பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகின்றது.
மே மாதம் முதல் அனைத்துப் பயனர்களுக்கு Google Meet பயன்பாட்டுக்கு வரும். இந்த சேவையானது நீண்ட காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட மாட்டாது, இது இந்த சேவை ஆரம்பிக்க நாட்களான இந்த நாட்களிலேயே இலவசமாக கிடைக்கப் பெறும்.
மேலும், தற்போது சில நாடுகளில் மட்டுமே கிடைக்கப் பெற்ற இந்த கூகுள் மீட் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கப் பெறும்.