Apps

உணவு முகாம்கள் மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடத்தை காட்டும் கூகுள் மேப்ஸ்!!

கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.

இதனால் ஏழை எளியோர், சாலையோரம் வசிப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள் போன்றோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு அரசாங்கமும் பொது மக்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கும் இடங்களையும், உணவு போன்றவற்றையும் வழங்கும் நிவாரண முகாம்களை இந்திய அரசாங்கம் துவக்கியுள்ளது.

உணவு முகாம்கள் மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடத்தை காட்டும் கூகுள் மேப்ஸ்!!

இந்த வசதிகள் அரசாங்கத்தால் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது.

அதாவது கூகுள் மேப்ஸ் இந்தியாவின் 30 நகரங்களில் உணவு முகாம்கள் மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடத்தை காண்பிக்கும்.

கூகுள் மேப்ஸ் தளத்தில் Food shelters in “city name” அல்லது Night shelters in “city name” என்று டைப் செய்தால், உங்களுக்கான விவரங்கள் கிடைக்கும்.

மேலும் இந்தத்  தகவலானது ஜியோபோன்களிலும் கிடைக்கிறது. இந்தத் தகவலானது தேவைப்படும் பயனர்களைச் சென்று அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

ஸ்மார்ட்போன் இல்லாத மக்களுக்கு தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், பொதுமக்கள் என மற்றவர்களும் உதவலாம் என்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil

ஜியோவுக்கு போட்டியாக மாதம் 70ஜிபி வழங்கிய வோடபோன்!!

TechNews Tamil

பிளிப்கார்ட்டின் FlipStart Days சேல்..!! ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி..

TechNews Tamil