Apps

கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றும் கூகுள் லென்ஸ்!!

கூகிள் நிறுவனம் அவ்வப்போது ஏதாவது சிறப்பு அம்சங்களை வெளியிட்டு பயனர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கூகிள் நிறுவனம் ஒரு சிறப்புமிக்க அம்சத்தினை வெளியிட்டு பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி என்னதான் அம்சம் என்று தெரிந்துகொள்ள நினைக்கிறீர்களா? நாம கஷ்டப்பட்டு பேப்பரில் எழுதின எழுத்துகளை லென்ஸ் கொண்டு டிஜிட்டலாக மாற்றலாம்.

அதாவது இந்த Google Lens மூலம் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் டிஜிட்டலாக மாற்றலாம். டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி சேவ் செய்துகொள்ளலாம்.

கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றும் கூகுள் லென்ஸ்!!

இந்த புதிய அம்சம் உண்மையில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும், கணிணியில் டைப் பண்ண நேரம் பிடிக்கும் என எண்ணும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டல் வடிவமாக மாற்றுதல் வேண்டும்.

இதனை கூகிள் லென்ஸ் அல்லது கூகிள் பயன்பாடு மற்றும் கூகிள் குரோம் ஆகியவற்றின் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் கூகிள் லென்ஸ் மற்றும் கூகிள் பயன்பாடுகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என தளங்களிலும் கிடைக்கிறது.

Related posts

அமேசானின் உள்ளூர் கடை திட்டம்.. சபாஷ் சரியான நேரம் இதுதான்!

TechNews Tamil

Work@Home பயனர்களுக்காக 4 நாட்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ!!

TechNews Tamil

அதிரடியான ஆஃபர்களுடன் Flipkart Month-End Mobiles Fest!

TechNews Tamil