Information Technology

இன்காக்னிட்டோ மோடில் கூகுள் கொண்டுவந்த அப்டேட்!

உலகின் மாபெரும் தேடுபொறி மற்றும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Google தனது புதிய Chrome 76-ஐ இன்று (ஜூலை 30, 2019) அறிமுகம் செய்கிறது.

இந்த Update-ன் வழியாக கூகுள் தனது Chrome Browser-ல் உள்ள ஒரு பிரதான பாதுகாப்பு ஓட்டையை சரி செய்ததோடு மட்டுமன்றி, சில அட்டகாசமான மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 


Google Chrome ஆனது தனது பயனர்களை Incognito Mode-ன் கீழ் சில வலைத்தளங்களை மறைநிலையாக பார்ப்பதற்கு அனுமதிக்கிறது. சமீபத்தில் Incognito Mode-ஐ பயன்படுத்தும் பயனர்களை சில வலைத்தளங்களால் கண்காணிக்க முடிகிறது எனும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

இன்காக்னிட்டோ மோடில் கூகுள் கொண்டுவந்த அப்டேட்!

இந்த சமீபத்திய Chrome 76 அப்டேட்டின்கீழ் Incognito Mode-ல் இருக்கும் குறிப்பிட்ட Loophole ஆனது சரி செய்யப்பட்டுள்ளது. இனிமேல் Incognito mode-ன் வழியாக பார்வையிடும் பயனர்களைக் கண்காணிப்பது கடினம் தான். 


கூகுள் க்ரோமில் நிகழும் இந்த அப்டேட்டின் கீழ், ஒரு பயனர் தனது இயங்குதளத்தில் உள்ள Dark Mode-ஐ Enable செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட வலைத்தளமானது தானாகவே அதன் Dark Mode Theme-ஐ Enable செய்துகொள்ளும். 


இந்த அப்டேட்டின் வழியாக, போதுமான எச்சரிக்கையின்றி பயனர்களின் Browser Habit-ஐ கண்காணிப்பதை கூகுள் தடுத்துள்ளது. அதாவது இனிமேல், ஒரு Extension ஆனது தனது கணினியில் என்ன செய்கிறது என்பதை பயனர்களால் காண முடியும். உடன் Notification-களை அழிக்க உதவும் Clear All பொத்தான் ஆனது மேல்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது, இனிமேல் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 


இந்த அப்டேட்டில் Omnibox-ன் வலது பக்கத்தில், Progressive Web Apps-களை எளிமையாக இன்ஸ்டால் செய்ய உதவும் Shortcut ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. 

Related posts

டாடா ஸ்கை வழங்கும் அசத்தலான 4 புதிய திட்டங்கள்!

TechNews Tamil

இன்றோடு ஓய்வு பெற்ற 78,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள்!!

TechNews Tamil

IRCTC அறிமுகப்படுத்தியுள்ள iMudra VISA கார்டு!

TechNews Tamil