கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக நிறைய அப்டேட்டுக்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வரும் ஜூலை 2ம் தேதி முதல் ஜிமெயிலில் புதிய வசதி கொண்டு வரப்பட்டது. இது ‘டைனாமிக் இமெயில்’ என்று அழைக்கப்படுகிறது.
ஜிமெயில் ஒரு பிரவுசர் போல செயல்படுகிறது. இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் பட்சத்தில், ஒரு மெயிலுக்கு ரிப்ளே அனுப்ப வேண்டுமென்றால், அந்த மெயில் தனியாக ஓபன் ஆகுவதற்கு தாமதமாகிறது. அதே போல், ரிப்ளே அனுப்பி விட்டு Back பட்டனை அழுத்தும் போது மீண்டும் இன்பாக்ஸ் வருவதற்கு சில நேரம் பிடிக்கிறது.

இந்த நிலையில், ஜிமெயிலின் புதிய வசதி மூலம், இனி சாதாரண பேஸ்புக் மெசேஜ் சாட்டிங்கை போல், சுருக்கமான கட்டத்தில் ரிப்ளே செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு மெயில் வந்து விட்டது என்றால், வழக்கம் போல் அதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது திரை முழுவதும் அந்த மெயில் காட்டப்படாது. மாறாக சுருக்கமாக சிறிய அளவிலான Chat Box போன்று கீழே தோன்றும். அதில் ரிப்ளே செய்தாலே போதுமானது.
இது
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.