Google உலகம் முழுவதிலும் பலவகையான சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் கூகுள் Doodle சில வருட காலமாக அந்தந்த நாடுகளின் முக்கிய கொண்டாட்டங்கள், முக்கியமான நபர்களின் பிறப்பு மற்றும் இறப்பு, போன்றவற்றினை கொண்டாடும் விதமாக லோகோக்களைக் கொண்டிருக்கும்.
உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அதிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் ஆகியோரின் சேவையானது பலரும் பாராட்டும் வகையில் இருந்து வருகிறது.
பொதுமக்கள் பலரும் அவரவர் வீடுகளில் இருந்து இவர்களுக்கு நன்றி கூறி வரும் நிலையில், கூகுளின் டூடுல் ‘நன்றி கொரோனா வைரஸ் உதவியாளர்கள்’ என்று கேப்ஷனாக வைத்து பாராட்டியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் இன்றைய டூடுல் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த டூடுலில் GOOGLE ல் இருக்கும் E டாக்டரைப் போல் உள்ளது, மேலும் இதனை ஓப்பன் செய்தால் Corona.MyGov.in வலைத்தளத்திற்குச் செல்கிறது. அதுகுறித்த தகவல்களை விளம்பரமாக வழங்குகிறது.
இதுவரை வைக்கப்பட்டுள்ள டூடுலில் நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கூகுள் டூடூலின் இந்த அர்ப்பணிப்பு டூடூல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.