வாட்ஸ் ஆப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும்.
வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சத்தினை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் கால் இணைப்புகள் அம்சமானது தற்போது வெளியாகியுள்ளது.
இந்த அம்சத்தினைப் பயன்படுத்தும் பட்சத்தில் பயனர்கள் புதிய அழைப்பிற்கு அழைக்கவோ அல்லது முன்னதாகவே உள்ள அழைப்பில் சேரவோ அனுமதிக்கும்.

வாட்ஸ் ஆப்பின் இந்த அம்சம் சோதனையில் இருந்த நிலையில் பயனர்களின் மொபைல்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
அதாவது இந்த அம்சத்தின் வாட்ஸ் ஆப் காலிங் இணைப்புகள் வழியாக ஒரே நேரத்தில் 32 பேர் வரை அழைப்பில் சேர அனுமதிக்கும்.
இந்த இணைப்புகளின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். காலிங் இணைப்பு மேற்கொள்வதற்கான ஆப்ஷன் கூகுள் மீட், ஜூம் மீட் போன்றவற்றினை ஒத்துள்ளது.
இந்த வாட்ஸ் அப் காலிங்க் அம்சமானது வாட்ஸ் ஆப் வெப்பில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.