Mobile

ரூ.7,956க்கு அறிமுகமான ஜியோனி ஸ்மார்ட்போன்.!

ஜியோனி நிறுவனம் சமீபகாலமாக எந்த ஸ்மார்ட்போனையும் வெளியிடாமல் இருந்தது. தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்ட, புதிய ஜியோனி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஜியோனி கே3 ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.7,956 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஜியோனி கே3 ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.9,983 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.7,956க்கு அறிமுகமான ஜியோனி ஸ்மார்ட்போன்.!

 இது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1520×720 பிக்சல் திர்மானம் ஆகியவற்றைக் கொண்டு உள்ளது.

 இது ஆக்டோ-கோர் மீடியாடெக் 6763 சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் டூயல் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

அதனுடன் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்றவற்றையும் கொண்டுள்ளது. இதில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

Related posts

வியட்நாமில் சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய ஐக்யூ யூ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன்!

TechNews Tamil