மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி நிறுவனம் தற்போது சீனாவில் ஜியோனி P50 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
ஐபோன் 13 போன்றே முன்புற தோற்றத்தை கொண்டுள்ளது. பிரைட் பிளாக், கிரிஸ்டல் மற்றும் டார்க் புளூ ஆகிய மூன்று நிறங்களில் வந்துள்ள
ஜியோனி P50 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
கேமரா அமைப்பு என்று கொண்டால் ஹெச்டி நைட் ஷாட், மேக்ரோ ஷாட் மற்றும் போர்ட்ரேட் பியூட்டி லென்ஸ் ஆகியவற்றுடன் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மேலும் சிப்செட் வசதியாக Unisoc T310 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மெமரி அளவாக 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது.
பேட்டரி என்று கொண்டால் 3,900mAh பேட்டரி வசதி கொண்டுள்ளது.
மேலும் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. மேலும் இதன் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது இது பார்ப்பதற்கு அப்படியே ஐபோன் 13 போல் உள்ளதால் பெரும் வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது.