Mobile

இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1560 பிக்சல்கள் தீர்மானம், 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா எனக் கொண்டால் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மெமரி அளவைப் பொறுத்தவரையில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் Unisoc 9863A SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது. இயங்குதளம் எனக் கொண்டால் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

இது 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட்டுள்ளது. ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

10000 வரை தள்ளுபடி அறிவித்துள்ள சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!

TechNews Tamil

இந்தியாவில் நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil