மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் டாஜ்லிங் பிளாக் மற்றும் மேஜிக் க்ரீன் வண்ணங்களில் வெளியாகி உள்ளது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 1600 x 720 பிக்சல்கள் எச்டி + ரெசல்யூஷன் கொண்டதாகவும், 91% ஸ்கிரீன்-டு-பாடி விகித அளவினைக் கொண்டுள்ளது.

ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 5100 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் மற்றும் 10 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4ஜி வோல்ட் இணைப்பு, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவு கொண்டுள்ளது.