Mobile

ஜியோனி நிறுவனத்தின் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!

இந்தியாவில் ஜியோ நிறுவனம் ஜியோனி எப்8 நியோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரையில் ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஜியோனி எப்8 நியோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரையில் 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும்  5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 3000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

ஜியோனியின் இந்த மாடலானது பிளாக், புளூ மற்றும் ரெட் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

ஒப்போ ரெனோ2 5G விரைவில் அறிமுகம்!!

TechNews Tamil

விவோ எஸ்1 இந்தியா சேல்: ஆஃப்லைன் விற்பனை தொடங்கியது

TechNews Tamil

இத்தாலியில் அறிமுகமானது அசுஸ் ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil