Mobile

ஜியோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஜியோனி கே3 ப்ரோ!

ஜியோனி நிறுவனம் கே 3 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜேட் கிரீன் மற்றும் பேர்ல் ஒயிட் என்ற 2 வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

ஜியோனி ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஹெச்டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 செயலி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜிபி கொண்ட ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 செயலியினை ஆதரவாகக் கொண்டுள்ளது.

ஜியோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஜியோனி கே3 ப்ரோ!

கேமரா அளவினைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, செல்பி கேமராவாக 13 மெகாபிக்சல் ஷூட்டர் கேமரா வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயங்குவதாக உள்ளது.

மேலும் இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் யூஎஸ்பி சி டைப் போர்ட், 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி சி டைப் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

பிப்ரவரியில் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒன் 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பல அம்சங்களுடன் அறிமுகமான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்!

TechNews Tamil