Mobile

ஜியோனி அறிமுகம் செய்துள்ள மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகி உள்ளது.

இந்த ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் ராயல் ப்ளூ என மூன்று வண்ணங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்க உள்ளது.

ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸில் இயங்குவதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் எச்டி + (720×1,560 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2.5 டி வளைந்த கண்ணாடி திரை பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் ஆக்டாகோர் யுனிசாக் 9863 ஏ எஸ்ஓசி ஆதரவினைக் கொண்டுள்ளது.

ஜியோனி அறிமுகம் செய்துள்ள மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை ஜியோனி மேக்ஸ் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஆழம் சென்சார் போன்றவற்றையும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியையும் கொண்டுள்ளது.

மேலும் ஜியோனி மேக்ஸ் 32 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

இது 5,000 mAh பேட்டரியைக் கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஜியோனி மேக்ஸில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஜூலை 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 8!

TechNews Tamil

ரூ.7,956க்கு அறிமுகமான ஜியோனி ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil