ஜியோவின் அவுட்கோயிங்க் காலுக்கான 6 பைசா கட்டணம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினைக் கொண்டதாக உள்ளது.
வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஜியோ நிறுவனம் பல வகையான ஆஃபர்களை அறிவித்து வருகிறது, மேலும் இது தீபாவளி பண்டிகைக்காக சில சலுகைகளை அளித்துள்ளது.
அதாவது ஜியோபோன் ரூ.699 க்கு விற்கவுள்ளதாக அறிவித்து உள்ளது.

ஜியோ நிறுவனம் அதன் 4ஜி ஸ்மார்ட் பீச்சர் போனை மற்றவர்களுக்கு
பரிசளிக்கக்கூடிய ஒரு ஆப்சனை அறிவித்துள்ளது.
ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை
என்ற சிறப்பு விற்பனையில் Gift Now என்ற ஒரு விஷயத்தினை
அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வலைத்தளத்தில் இந்த Gift Now என்கிற ஆப்சன் உள்ளது, இதைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம்.
மேலும் இதனுடன் கூடுதலாக சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களையும்
அறிவித்துள்ளது. ரூ.800 விலைக்கு ஒரு ஜியோ போன் + 1 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும். ரூ.1000 விலைக்கு ஒரு ஜியோ போன் + 3 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும்.
ரூ.1500 விலைக்கு ஒரு ஜியோ போன் + 8 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும்.
ரூ.2000 விலைக்கு ஒரு ஜியோ போன் + 11 மாதத்திற்கான ரீசார்ஜ் கிடைக்கும்.