Information Technology

சென்னையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது ஜியோ தான் – டிராய் வெளியிடு

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைகளை குறித்த தரவுகளை இணையத்தில் பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் மாவட்டம், மாநில வாரியாக எந்த நெட்வொர்க் இணையத்தின் வேகம் நன்றாக உள்ளது, எந்த நெட்வொர்க்கில் கவரேஜ் நன்றாக கிடைக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பதிவேற்றப்பட்டுள்ளது.

4ஜி சேவையில் சராசரியாக 12.7 Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கி ஜியோ நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது இதையடுத்து 9.3 Mbps வேகத்தில் ஏர்டெல், வோடபோன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

சென்னையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது ஜியோ தான் – டிராய் வெளியிடு

பி.எஸ்.என்.எல்லில் இன்னும் 4ஜி டேட்டா சேவை முழுமை பெறவில்லை. கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பி.எஸ்.என்.எல் 2.7 Mbps வேகத்தில் கடைசி இடத்தில் உள்ளது.

4ஜி டேட்டா வந்த பிறகு 3ஜி டேட்டா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜியோவில் 3ஜி நெட்வோர்க் கிடையாது. எனவே, மீதம் உள்ள நெட்வொர்க்கை பார்க்கும் போது, 2.5 Mbps வேகத்தில் வோடபோன் 3ஜி சேவையில் முதல் இடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து 2.4 Mbps வேகத்தில் பி.எஸ்.என்.எல் இரண்டாம் இடமும், 2.3 Mbps வேகத்தில் ஏர்டெல், ஐடியா ஆகியவை அடுத்தடுத்து இடங்களிலும் உள்ளது. ஏர்டெலில் விரைவில் 3ஜி சேவை நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

4ஜி சிம் நெட்வொர்க்கில் இருக்கும் போது, சிக்னல் கிடைப்பதில் -84.98 dBm என்ற அளவில் ஜியோ 4ஜி சேவை நன்றாக உள்ளது. ஏர்டெல் -95.94 dBm, வோடபோன் -95.00 dBm, பி.எஸ்.என்.எல் -93.20 dBm என்ற அளவில் சுமாராகவும் உள்ளது. இதே போல், 3ஜி சிம் நெட்வொர்க்கில் ஏர்டெல் -83.83 dBm, பி.எஸ்.என்.எல் -78.57 dBm என்ற அளவில் நன்றாக உள்ளது. 


சென்னையிலும் ஜியோ தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. சராசரியாக ஜியோவின் 4ஜி டேட்டா 17.3 Mbps வேகமாக உள்ளது. இரண்டாம் இடத்தில் வோடபோன் (11.6 Mbps), கடைசி இடத்தில் ஏர்டெலும் (9.8 Mbps) உள்ளது. 


Related posts

புது முயற்சியாக BSNL உடன் கூட்டு சேர்ந்த Paytm !!

TechNews Tamil

IRCTC அறிமுகப்படுத்தியுள்ள iMudra VISA கார்டு!

TechNews Tamil

அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை!

TechNews Tamil