Information Technology

ஜியோ ஃபைபர் வெளியீட்டு தேதியினை முன்னிட்டு சலுகை!!

ஜியோ செல்பேசி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோ ஜிகாபைபர் ப்ராட்பேண்ட் சேவை  2018 ஆம் ஆண்டு வரை 1,100 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த சேவை 1,600 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; இந்தியா புதிய இந்தியாவாக வளர்ந்து வரும் சூழலில் ரிலையன்ஸும் புதிய ரிலையன்ஸாக உருவாகும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, ‘ஜியோ ஃபைபர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஜியோ ஃபைபர் வெளியீட்டு தேதியினை முன்னிட்டு சலுகை!!

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் நடைமுறைக்கு வரும் என்றார். ஜியோ ஃபைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

ஜியோ ஃபைபர் மூலம் இணையதள சேவை, டிவி கேபிள் சேவை, தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட மூன்று சேவைகளையும் ஒரே வயர் மூலமாக வீடுகளுக்கு கொண்டு சென்று ஜியோ ஃபைபர்  திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

3 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிளானை நீட்டிப்பு.!

TechNews Tamil

கூடுதல் கட்டணமில்லாமல் பே சர்வீஸ் சேனலை வழங்கத் திட்டமிட்டுள்ள டிஷ் டிவி!!

TechNews Tamil

கொரானோ வைரஸால் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து!!

TechNews Tamil