சாம்சங் Samsung Galaxy A70s சமீபத்தில் அறிமுகமாகி சிறப்பான வரவேற்பினைப் பெற்றது.
- Samsung Galaxy A70s இன் 6 ஜிபி + 128 ஜிபியின் விலை- 28,999 ரூபாய்.
- Samsung Galaxy A70s இன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 30.999.
இந்த ஸ்மார்ட்போன், Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 6.7-inch full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானத்தையும், அதனுடன் Super AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 675 SoC கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவைப் பொறுத்தவரை, Galaxy A70 போன்றே பல தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை இது கொண்டுள்ளது. மேலும் அதிலிருந்து மேம்பட்ட அம்சமாக 64-megapixel f/1.8 முதன்மை கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் 8-megapixel ultra-wide-angle shooter மற்றும் 5-megapixel கேமரா போன்றவற்றையும், முன்பக்கத்தில் 32-megapixel f/2.0 selfie shooter போன்றவற்றையும் இதில் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சிம் கொண்டு Samsung Galaxy A70s வாங்கப்பட்டால் ரூ. 198 மற்றும் ரூ. 299 ரூபாய்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும். ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு ரூ. 249 மற்றும் ரூ. 349 ரூபாய்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்.