தற்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல மின்னனு உபகரணங்களை வெளியிட்டு வரும் கிளா நிறுவனம் தற்போது புதிய கேமிங் இயர்போன்களை வெளியிட்டுள்ளது.
விலை ரூ.990 என்ற விலைக்கு நிர்ணயம் ஆகியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிளா ஜி9 இயர்போனின் மிகச் சிறப்புமிக்க அம்சமாக கருதப்படுவது, கேமிங் ஆர்வலர்களை கருத்தில் கொண்டே இந்த இயர்போன் பல அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்போன் 3டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கக் கூடியதாக உள்ளது, இதில் கூடுதலாக 10எம்.எம் டிரைவர்கள் உள்ளது. கேம் விளையாடும்போது சிறப்பான ஆடியோ சவுண்டுகளை இதன்மூலம் பெற முடியும்.
360 டிகிரியில் செயல்படக் கூடிய, பூம் மைக் கொண்டதாக இந்த போன் உள்ளது. இது இளைஞர்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது.
மேலும் இதில் உள்ள, டூயல் ஃபிளாங் இயர் டிப்கள் கேமிங்கின் போது வெளிபுற சத்தம் இடையூறு எதுவும் ஏற்படுத்தாது.
சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இயர் ஹூக் காதுகளில் பொருத்திக் கொள்ளும்படியாக உள்ளது.
கால் அட்டென்ட் செய்வது, கால்களை ரிஜெக்ட் செய்வது, பாடல்களை பிளே பண்ணுவது, பாடல்களை பாஸ் செய்வது, , பாடல்களை மாற்றுவது போன்ற அனைத்து சேவைகளையும் கொண்டதாக உள்ளது.