சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
1. கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 1,09,999
இந்த ஸ்மார்ட்போனுக்கான விற்பனை நேற்று காலை துவங்கியது, ஏறக்குறைய 1 மணி நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்றுத் தீர்ந்துவிட்டது.
மேலும் இந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

வெளி்ப்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300×112 ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமராவினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 10 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் இது 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.