சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 3 எப்போது அறிமுகமாகும் என பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது, இந்தநிலையில் இந்த கேலக்ஸி வாட்ச் 3 குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது, அதாவது இந்த கேலக்ஸி வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச் ஜூலை மாதம் 22 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கேலக்ஸி வாட்ச் 41 எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித டையல் அளவுகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இரு மாடல்களிலும் 8 ஜிபி மெமரி, 1 ஜிபி ரேம் என்ற அளவில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கூடுதலாக ஜிபிஎஸ், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் எம்ஐஎல் எஸ்டிடி 810ஜி போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த கேலக்ஸி வாட்ச் 3 மாடல் எல்டிஇ மற்றும் எல்டிஇ இல்லாத வேரியண்ட் என இரண்டு வகைகளில் வெளியாகவுள்ளது. மேலும் இது 41எம்எம் மற்றும் 45எம்எம் டையல் ஆப்ஷன்களில் கிடைக்கப் பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவை 247 எம்ஏஹெச் மற்றும் 340 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த பிற விவரங்கள் கிடைத்தவுடன் அப்டேட் செய்கிறோம்.