Gadgets

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி!!!

சாம்சங் நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த டேப்லெட் மாடல் 5ஜி ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

இந்த டேப்லெட் மாடல் ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 10.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 1600 x 2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி!!!

இது அட்ரினோ 640ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது.

கேமராவினைப் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது எல்இடி பிளாஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றையும் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

இது 7040எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப் அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் சிறப்பு அம்சங்களுடன் அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் அறிமுகம்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள 32-இன்ச் Mi TV Pro E32S ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil