Mobile

முன்பதிவினைத் துவக்கியுள்ள கேலக்ஸி எஸ்20!!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எஸ்20 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அதன் முன்பதிவினைத் துவக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 3200×1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது அட்ரினோ 650 GPU வசதி கொண்டதாக உள்ளது.

முன்பதிவினைத் துவக்கியுள்ள கேலக்ஸி எஸ்20!!

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா,  64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 10 எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/ உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்றவற்றினக் கொண்டுள்ளது.

Related posts

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

TechNews Tamil