Mobile

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி எஸ் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கு புதிய புதுப்பிப்பை சாம்சங் துவங்கியுள்ளது. இந்த அப்டேட்டில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் சிங்கிள் டேக் மற்றும் புரோ வீடியோ போன்ற கேமரா அம்சங்களும் இருக்கும்.

ஸ்பெயினில் தற்போது கேலக்ஸி எஸ் 10 லைட்டுக்கான ஒரு யுஐ 2.1 புதுப்பிப்பை சாம்சங் வெளியிட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10nmஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயங்கும் தன்மையானது.

இந்த ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 9810 சிப்செட் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இன்னும் ஒரே வாரத்தில் அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7!!!!

TechNews Tamil