சாம்சங் நிறுவனம் தற்போது அதன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை வழங்குகிறது. மேலும் இது தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2690 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அட்ரினோ 630 ஜிபியு வசதி கொண்டதாகவும், மேலும் ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர் மாலி G72MP18 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் 512 ஜிபி உள் சேமிப்பு என்ற இரண்டு வகைகளில் வருகிறது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, மேலும் முன்புறத்தில் 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.1 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.