Mobile

இரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10லைட் ஸ்மார்ட்போன் சிஇஎஸ் 2020 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்னும் இரு தினங்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

வெளியான தகவலின்படி கேலக்ஸி 10லைட் ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பங்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருப்பதால், பலரும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

கேலக்ஸி நோட் 10லைட் ஸ்மார்ட்போனின் விலை-  ரூ.35,990-

இரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 10nmஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயங்கும் தன்மையானது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது Samsung Galaxy Z Flip ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

4000 ஆஃபருடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒன்பிளஸ் 7 & ஒன்பிளஸ் 7 ப்ரோ மீது அசத்தலான தள்ளுபடி!

TechNews Tamil