Mobile

முன்பதிவைத் துவக்கிய கேலக்ஸி நோட் 10 லைட்!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஜனவரி 20 ஆம் தேதி துவங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விற்பனையானது பிப்ரவரி மாதம் முதல் வாரம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

முன்பதிவைத் துவக்கிய கேலக்ஸி நோட் 10 லைட்!!

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 10nmஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.

கேமராவைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மில்லியன் கணக்கான பயனர்களை எரிச்சலூட்டும் ஆப்பிள் ஐபோன் iOS 13!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil