Mobile

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது.

இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 30 ஆம் தேதி ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது இதன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

1.    கேலக்ஸி நோட் 10 லைட் 6ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.36,990

2.    கேலக்ஸி நோட் 10 லைட் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை-  ரூ.38,990

சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் ஆனது. வியக்கவைக்கும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாளை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு!!

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

இது 10nmஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டதாக உள்ளது.

இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகியுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட Realme X2 இன் அசரவைக்கும் அம்சங்கள்!!

TechNews Tamil

தற்போது Twilight Orange நிறத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil