Mobile

விரைவில் களமிறங்கும் கேலக்ஸி எம்31!!

 சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது,

இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M315F ஆகும், இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியை கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

விரைவில் களமிறங்கும் கேலக்ஸி எம்31!!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது 6.5 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியாக வெளியானது Huawei Nova 5z!

TechNews Tamil

விரைவில் வெளியாகத் தயார்நிலையில் உள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil