Mobile

ஜெர்மனியில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது எம்22 ஸ்மார்ட்போனை ஜெர்மனியில் வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் 1600 × 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு கொண்டுள்ளது.

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

ஜெர்மனியில் வெளியான  சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி மெயின் கேமரா, 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்22 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

ஸ்விட்சர்லாந்தில் அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ரூ. 15,000 ரூபாயில் வெளியாகும் Vivo Y5s!

TechNews Tamil

எக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil