Mobile

மார்ச் 16 ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலை மார்ச் மாதம் 16 ஆம் தேதி  அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு வசதியைப் பொறுத்தவரை கை ரேகை சென்சார் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இது  கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமராவினைக் கொண்டிருக்கும் என்றும், மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மார்ச் 16 ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டு இயக்கக்கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமாகவுள்ள ஹானர் 20எஸ்!!

TechNews Tamil

இந்த மாத இறுதிக்குள் களம் இறங்கவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நவம்பர் 29 முதல் Cosmic Purple நிறத்தில் Redmi Note 8 !

TechNews Tamil